Map Graph

திரைலோக்கியநாதர் கோயில்

திரைலோக்கியநாதர் கோயில் அல்லது திருப்பருத்திக்குன்றம் ஜீனசுவாமி கோயில் (Trilokyanatha Temple in Thiruparthikundram, என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரத்தின் புறநகர் பகுதியான திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள ஒரு சைனக் கோயிலாகும். இது சைன சமயத்தின் திகம்பம்பர பிரிவைச் சேர்ந்த கோயில். திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயிலானது பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணுவால் கி.பி 556 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போது இந்தக் கோயில் `வர்த்தமானீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் செங்கல் கோயிலாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில்,பிற்கால சோழ மரபைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டது. பின்னர், விஜய நகரப் பேரரசு காலத்தில் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது.

Read article
படிமம்:Tiruparuthikundram_(15).jpgபடிமம்:Tiruparuthikundram_(2).jpgபடிமம்:Tiruparuthikundram_(4).jpgபடிமம்:Tiruparuthikundram_(11).jpg